Saturday, September 23, 2023
Home Blog

கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி வேண்டும் நித்யானந்தாவுக்கு ஓட்டல் அதிபர் கடிதம்!

0

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கேட்டு தமிழர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா மீது ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர், அதில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.

On the run Controversial godman Nithyananda has his Own country Kailaasa Jagran Special

அது குறித்து அவ்வப்போது தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இன்று கூட விநாயகர் சதுர்த்தி என்பதால், கைலாசா நாட்டின் கைலாசாவின் 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்.

தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டலஅர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்தார்.இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என அறிவித்துள்ளார். இந்த பொற்காசு 11.6638038 கிராம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ஓட்டல் நிறுவனர் குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கைலாசா நாட்டில் ஓட்டல் துவங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் இன்று முதல் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க அரசு அனுமதி

0

பெங்களூரு: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் மாநில அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதற்கு சில வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டு உள்ளது.

Liquor Mart, Koramangala, Bangalore - magicpin

அதுபற்றிய விவரம் வருமாறு:-

 • மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
 • உடல்வெப்ப நிலையை பரிசோதிக்கும் கருவிகள், சானிடைசர் திரவத்தை நுழைவுவாயிலில் வைக்க வேண்டும்.
 • பார், கேளிக்கை விடுதி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற கூடாது.
 • மதுபானம், உணவை கதவின் அருகே வைக்க வேண்டும்.
 • ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்.
 • வாகனம் நிறுத்தும் இடத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
 • வருகை, வெளியே செல்ல தனித்தனி பாதைகள் அமைக்க வேண்டும்.
 • வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளி விட்டு நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • ஏ.சி.யை 24 முதல் 30 டிகிரி செல்சியலில் வைக்க வேண்டும்.
 • கட்டணத்தை முடிந்த வரை ஆன்லைனில் செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.
 • வாடிக்கையாளர் சென்ற பிறகு அவர் நின்ற இடத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

0
kejriwal aravind

புதுடெல்லி: டெல்லியில் மின்சார வாகன கொள்கையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியட்டுள்ளார். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக இந்தியா அதிகப்படியான தொகையை செலவு செய்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவ்விரு பிரச்னைகளுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

Delhi Assembly Elections: Arvind Kejriwal Responds To Amit Shah ...

எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய தலைநகரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும், மாசு அளவைக் கட்டுபடுத்தவும் மின்சார வாகனக் கொள்கையை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இந்த மின்சார வாகனக் கொள்கை நாட்டின் மிக முற்போக்கான கொள்கையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் புதிய மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படும் என்று நம்புகிறோம். மின்சார வாகனக் கொள்கையை செயல்படுத்த மின்சார வாகன அமைப்பு நிறுவப்படும் என்று கூறியுள்ளார்.

பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

0

மும்பை: பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2008ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் முதன்முறையாகக் கடன் புதுப்பிப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி தனி மனிதர்கள், நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு வசதியாக திவால் மற்றும் நொடிப்பு நிலையை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

Reserve Bank of India gives CRR relief to banks for 5 years ...

கடனைக் காலதாமதமாகத் திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த காலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முடிவடைவதையொட்டி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களுக்கான தவணைகளை மூன்று மாதம் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 27-ம் தேதி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தது.

இந்த மூன்று மாத நிறுத்திவைப்பு என்பது மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தவேண்டிய தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய அரசு முதல் முதலில் மூன்று வார காலத்துக்கு மட்டுமே முடக்க நிலை அறிவித்தது. அந்நிலையில், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் மூன்று வார காலத்துக்குப் பிறகு தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் மூன்று மாத கால தவணை நிறுத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல்

0

திருவனந்தபுரம்: கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.05 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு என்.ஐ.எ.நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Kerala gold smuggling case knocks at the door of CM's office ...

தென் சீன கடல்…வியட்நாம் மீது சீனா அழுத்தம்…ஒரு பில்லியன் டாலர் நஷ்டம்!!

0

ஹனோய்: சீனாவின் அழுத்தம் காரணமாக இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வியட்நாம் முறித்துக் கொண்டது. இதனால், அந்த நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தென் சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதை தற்போதைக்கு வியட்நாம் நிறுத்திக் கொண்டுள்ளது.

ஹனோய்: சீனாவின் அழுத்தம் காரணமாக இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வியட்நாம் முறித்துக் கொண்டது. இதனால், அந்த நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தென் சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதை தற்போதைக்கு வியட்நாம் நிறுத்திக் கொண்டுள்ளது.

MGR statue: எம்.ஜி.ஆருக்கும் காவித்துண்டு… என்ன நடக்கிறது?

0

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக, மரியாதைக்குரிய பெரியவர்களை காவிமயமாக்கும் கலாசாரம் தொடர்ந்து வருகிறது. பாரதியார், திருவள்ளுவர் என இலக்கியப் பெருந்தலைகளை இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்கும் விதமாக அவர்கள் காவிமயப்படுத்தப்பட்ட விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக இருந்தது.

இட ஒதுக்கீடு…ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்…எல். முருகன் கேள்வி!!

0

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் இதுவரை இன்னும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும். ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தி. நகரில் இருக்கும் பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு இன்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வந்திருந்தார். அவர் அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”நாடு முழுவதும் பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவீதம், பட்டியலின மக்களுக்கு 15 சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுவும் மாநிலங்களில் இருக்கும் இந்த மக்களின் சதவீதத்தைப் பொறுத்து மாறுபடும். அப்படி பார்க்கும்போது, பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும்

Hello world!

1

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!