பெங்களூரு: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் மாநில அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதற்கு சில வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டு உள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
- மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
- உடல்வெப்ப நிலையை பரிசோதிக்கும் கருவிகள், சானிடைசர் திரவத்தை நுழைவுவாயிலில் வைக்க வேண்டும்.
- பார், கேளிக்கை விடுதி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற கூடாது.
- மதுபானம், உணவை கதவின் அருகே வைக்க வேண்டும்.
- ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்.
- வாகனம் நிறுத்தும் இடத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
- வருகை, வெளியே செல்ல தனித்தனி பாதைகள் அமைக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளி விட்டு நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஏ.சி.யை 24 முதல் 30 டிகிரி செல்சியலில் வைக்க வேண்டும்.
- கட்டணத்தை முடிந்த வரை ஆன்லைனில் செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.
- வாடிக்கையாளர் சென்ற பிறகு அவர் நின்ற இடத்தை சுத்தப்படுத்த வேண்டும்.