சென்னை: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் இதுவரை இன்னும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும். ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தி. நகரில் இருக்கும் பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு இன்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வந்திருந்தார். அவர் அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”நாடு முழுவதும் பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவீதம், பட்டியலின மக்களுக்கு 15 சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுவும் மாநிலங்களில் இருக்கும் இந்த மக்களின் சதவீதத்தைப் பொறுத்து மாறுபடும். அப்படி பார்க்கும்போது, பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும்